புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை இவற்றின்படியே குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவற்றுக்கு மாற்றாக பாரத்திய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரத்திய சாக்ஷிய அதிநியம், பாரத்திய நியாய சன்ஹிதா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உறுவாக்கப்பட்டுள்ளன.
முந்தய இந்திய தண்டனை சட்டங்களில் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படாமல் இருந்தது புதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் அதற்கு விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது அதுமட்மின்றி பயங்கரவாத செயல்கள் ஆயுதப்புரட்சி நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது குறிப்பிட்ட ஆண்டு சிறைத்தண்டனையை அபராதத்தோடு விதிக்க புதிய குற்றவியல் சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும் இது வரை ராஜதுரோகம் என குறிப்பிடப்பட்டது புதிய சட்டங்களில் தேச துரோகமாக மாற்றப்பட்டுள்ளது பயங்கரவாதம் கொலைகள் மற்றும் தேசியப்பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன
புதிய சட்டங்களில் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, மற்றும் தற்கொலை முயற்ச்சி போன்றவற்றுக்கான தண்டனை தொடர்பாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய சில ஆண்டுகளாக கும்பலாக கொலையில் இடுபடுவது சர்வசாதாரணமாகி விட்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க விசயம்.
இது தவிர எப்.ஐ.ஆர் போடுவது விசாரனை மேற்கொள்ளுவது தடயவியல் முறைகள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு காலக்கெடு நிர்ணயித்திருப்பது வரவேற்க தக்கதே. பயங்கரவாத செயல்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சிறிய அளவிலான குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவையை அறிமுகப்படுத்தியிருப்பதும் சீர்திருத்த நடவடிக்கையே.
புதிய குற்றவியல் சட்டங்கள் சிறப்பானவை என்பதை இப்போதே கூறமுடியாது என்றாலும் வருங்காலங்களில் இவற்றின் அமுலாக்கத்தை பொறுத்து மாற்றங்கள் தேவையெனில் செய்வதே சரியானதாக இருக்கும் அத்துடன் புதிய சட்டங்கள் தண்டனை வழங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காமல் நீதியை நிலைநாட்டுவதாக இக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்பாக உள்ளது.