முதியவருடன் உணவை பகிர்ந்துகொண்ட காவலர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தில்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவிலும் மாணவர்கள் இதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்இந்நிலையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர், போராட்டம் நடைபெற்ற பிறகு சாலையின் ஓரமாக அமர்ந்து கடையில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிட தயாரானார். அப்போது அருகில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் அவரை பார்க்க, அவரிடம் காவலர் நீங்கள் சாப்டிங்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை என்று கூறவே, தன்னுடன் அமர்ந்து அவரையும் சாப்பிட வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்