Police Department News

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2.7 கிலோ வெள்ளி

நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கு பகுதியில் தனி

வட்டாட்சியர் ரெங்கசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன

தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர்

நோக்கி சென்ற கூரியர் நிறுவன வாகனத்தை சோதனை செய்த போது 6 கிலோ 334 கிராம்

தங்கம், 2 கிலோ 769 கிராம் நகைகள் இருந்தது தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விசாரணையில், மதுரை அய்யர்பங்களா பகுதியில் செயல்படும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட கூரியர் நிறுவனம் வாகனம் மூலம் மதுரையில் இருந்து சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி பகுதிகளில் உள்ள பிரபல நகை

கடைகளுக்கு தங்க நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். தங்க நகைகள் கொண்டு வந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர்

அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக உதவி தேர்தல் அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.