
55 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கூடிய புதிய தாம்பரம் மாநகர காவல் ஆணையரகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்
தாம்பரம் மாநகர காவல் துறைக்கென புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் .
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் புதிய காவல் ஆணையரகக் கட்டிடம் அமையவுள்ளது. சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் 8 தளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடமாக இது கட்டப்பட உள்ளது.
இதனை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, தாம்பரம் காந்தி சாலை வளாகத்தில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் தாம்பரம் இணை ஆணையர் ஜெயலட்சுமி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்திற்கான கல்வெட்டினைத் திறந்து வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், காவல் ஆளுநர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், தாம்பரம் மாநகர காவல் துறையின் நிர்வாகப் பணிகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்குச் சிறந்த சேவை வழங்க வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





