சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதன் சிறப்பு ஏற்பாட்டில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீஸார் தங்களது குடும்பத்துடன் ‘தர்பார்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கூட்டணியில் உருவான ‘தர்பார்’ திரைப்படம் ஜன.9-ம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த திரைப்பட் போலீஸை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது.
இதையடுத்து தொடர்ந்து பணிசெய்துவந்த சிவகங்கை மாவட்ட போலீஸாரின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சலுகை விலை டிக்கெட்டில் ‘தர்பார்’ திரைப்படம் பார்க்க மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் சிறப்பு ஏற்பாடு செய்தார்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட காவல்நிலையம் மற்றும் சிவகங்கை ஆயுதப்படையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீஸார் தங்களது குடும்பத்துடன் மானாமதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை 10 மணிக்கு ‘தர்பார்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளோம். அதற்கு முன்னதாக குடும்பத்துடன் திரைப்படம் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தத் திரைப்படம் போலீஸ் அதிகாரி பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது. திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்த எஸ்பிக்கு பெரும் மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்தனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.