Police Department News

வைரஸ் முன்னெச்சரிக்கையாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு வீட்டில் முழு ஓய்வு: சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் திரு.சுதாகர் ஐபிஸ் உத்தரவு !

வைரஸ் முன்னெச்சரிக்கையாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு வீட்டில் முழு ஓய்வு:
சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் திரு.சுதாகர் ஐபிஸ் உத்தரவு !

கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் வகையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு பணி வழங்காமல் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி இணை ஆணையர் ஆர்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிழக்குமண்டல காவல் இணை ஆணையர்ஆர்.சுதாகர் தனது எல்லைக்கு உட்பட்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், ‘144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இருக்காது. எனவே, குறைந்த அளவு காவலர்களை வைத்துக் கொண்டு மீதம் உள்ளவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். யாரும் தொடர்ந்து இரவு பணி செய்யக் கூடாது. தாராளமாக விடுப்புகொடுங்கள். அனைத்து போலீஸாரும் முகக்கவசம் அணிய வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கும் பணி வழங்காமல் வீட்டில் முழு ஓய்வு எடுத்துக் கொடுங்கள்.

இரவுப் பணி ஆற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு இரண்டு நாட்கள் ஓய்வு அளித்து பின் மீண்டும் பணி வழங்குமாறும் காவலர்கள் ஓய்வில் இருந்தாலும் தொடர்ந்து இணைப்பில் இருக்கும்படியும் அறிவித்துள்ளார். இது காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.