Police Department News

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மத போதகர் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மத போதகர் கைது

மதுரை C 2 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான சுப்பிரமணியபுரம் பகுதியில், இரு சக்ர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்ததை தொடர்ந்து, திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள CC TV கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்த போது தனக்கன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் விஜயன் (எ) சாமுவேல் வயது 36, மத போதகர் அவர்களுக்கு வாகனம் திருடுவதில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுப்பிரமணியபுரம் C 2 காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் பிரியா அவர்களின் உத்தரவுப்படி சார்பு ஆய்வாளர் ஜெய்சங்கர், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 ன்படி வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தி இவரிடமிருந்து 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்

போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.