Police Department News

பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்.

பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்.

கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு வணிகர்கள், ரோட்டரி , லயன்ஸ் கிளப் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவல்துறை,பொதுமக்கள், வணிகர்கள் என எல்லோரும் இணக்கமான சூழலை உருவாக்க கண்டிப்பாக முயற்சி எடுக்கப்படும். காவல்நிலையத்தில் எந்த புகார் அளித்தாலும் உடனடியாக சிஎஸ்ஆர் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க வேண்டிய வழக்காக இருந்தால் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எனது கவனத்திற்கு வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காவல்துறை பணி என்பது மக்கள் பணி, காவல்துறை தங்களுடைய இயல்பான சமுக பணிகளை செய்ய வேண்டும் என்று காவல்துறையினரை ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை வைத்து எல்லா காவல்துறையும் தவறு என்று சொல்ல முடியாது. காவல்துறையினரை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் காவல் துறைக்கு தேவையான விழிப்புணர்வு கொடுக்க காவல்துறை தயாராக இருக்கிறது, பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும் என்றார்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் மாவட்ட நிருபர் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.