கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கன்னிவாடி காவல் ஆய்வாளர் அவர்கள்.
21.10.2020திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நெட்டியபட்டி, நடுப்பட்டி கிராமங்களுக்கு கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நேரடியாக சென்று கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது பற்றியும், இன்றைய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது பற்றியும், அதிலிருந்து அவர்களை மீட்டு எப்படி நல்வழிப் படுத்துதல் பற்றிய ஆலோசனை குறித்தும், கிராமப்புறங்களில் CCTV கேமராக்களை பொருத்துவது தொடர்பான ஆலோசனை பற்றியும், தங்கள் கிராமங்களில் அன்னிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல்துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.