Police Department News

உதவிக்கரம் நீட்டிய சென்னை கூடுதல் ஆணையர். மனிதநேய பண்பாளர் . உயர்திரு. தினகரன் ஐ.பி.எஸ் அவர்கள்.

உதவிக்கரம் நீட்டிய சென்னை கூடுதல் ஆணையர். மனிதநேய பண்பாளர் . உயர்திரு. தினகரன் ஐ.பி.எஸ் அவர்கள்.

            கல்வி கற்க வழியின்றி கண்ணீரில் வாடிய ஏழை மாணவன் ஒருவனுக்கு ஓடிவந்து உதவி செய்துள்ளார் . 

         சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர் உயர்திரு. தினகரன் ஐபிஎஸ் அவர்கள் .

         கடந்த வாரம் பொதுமக்களிடம் அவர் ஆன்லைன் மூலம் குறை கேட்ட நேரத்தில், சென்னை தி.நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மாணவர் . 

நான் கல்லூரி படிக்க ஆசைப்படுகிறேன்.

         எனக்கு உதவி செய்ய முடியுமா.? என்று கேட்டுள்ளார் .

        சரி, உன் தந்தையை பேசச் சொல் என்றதும், எனக்கு தந்தை, தாய் யாரும் இல்லை. நானும் தங்கையும் தனியாக அத்தை வீட்டில் இருக்கிறோம். 

இருவரும் படிக்க ஆசைப்படுகிறோம்.

             ஆனால்., எங்களுக்கு மேற்கொண்டு உதவ யாரும் இல்லை . அத்தை வீட்டு வேலை செய்கிறார். 

             பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறேன் என்று கலங்கியுள்ளார்.  

             உடனே இன்ஸ்பெக்டர் ஒருவரை சதீஸ் வீட்டுக்கு அனுப்பி உண்மை நிலையை அறிந்து வருமாறு அனுப்பி உள்ளார் .

உயர்திரு. தினகரன் ஐபிஎஸ் அவர்கள்.

            அவரும் சதீஷ் வீட்டுக்கு சென்று பார்க்க பத்துக்கு பத்து சின்ன அறையில் வசிப்பதை கூடுதல் ஆணையரிடம் உறுதிப்படுத்தியுள்ளார் .

             உடனே சதீஷ்குமார் அவரது அத்தை தங்கை என எல்லோரையும் வரவழைத்து பேசியவர் . 

           சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.காம் சேர்த்து விட்டதோடு..,

          கல்லூரி கட்டணத்தையும் அவரே கட்டி மேற்கொண்டு விடுதியில் தங்கி படிக்கும் ஏற்பாடு செய்தார் .

              சதீஷின் தங்கையையும் பள்ளிப்படிப்பு விடுதி வசதி என முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார் .

                  ஆன்லைனில் அழுத மாணவரின் கண்ணீரைத் துடைத்த கூடுதல்  ஆணையருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. 

Leave a Reply

Your email address will not be published.