Police Department News

குழந்தைகள் தினம் மற்றும் சைல்டுலைன் 1098 குழந்தைகள் நண்பர்கள் வார தொடக்க விழா – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பங்கேற்பு

குழந்தைகள் தினம் மற்றும் சைல்டுலைன் 1098 குழந்தைகள் நண்பர்கள் வார தொடக்க விழா –
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சைல்டுலைன் 1098 குழந்தைகள் நண்பர்கள் வார தொடக்க விழாவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகள், துன்பத்தில் தவிக்கும் குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள், ஆதரவற்ற, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்படையும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து சைல்டுலைன் 1098 நோடல் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நவம்பர் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை குழந்தைகள் நண்பர்கள் வார கொண்டாட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களை சேர்ந்த கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான அன்புக் கடிதம் வழங்குதல், இணையதளத்தில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள், குழந்தைகளுக்காக தன்னார்வலர்களை இணைத்து பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நவம்பர் 13 முதல் 20-ம் தேதி வரை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 விழிப்புணர்வு பலகை வைத்தல் போன்றவை நடைபெறவுள்ளது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா  விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிட, சைல்டுலைன் 1098 இயக்குனர் சுவாமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா பொது மேலாளர் பிரேம் ஆனந்த், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், முதுநிலை திட்ட மேலாளர்கள் நம்பிராஜ், லோகநாதன், ஜெரோமியா ஜெபஸ்டின், வெங்கடேசன், உதவி திட்ட மேலாளர்கள் சிலம்பரசன், சதீஷ் குமார், நிஷ்யா, சிரில் சுதாகர், செல்வம் மற்றும் குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.