மதுரை, அண்ணாநகரில் 35 ஆப்பிள் செல் போன் திருடிய திருடன் கைது
வேலை பார்த்த இடத்தில் 35 ஆப்பிள் போன்களை திருடிய, செல் போன் சர்வீஸ் நிறுவனத்தில் வேலே பார்த்த திருடன் கைது.
மதுரை மாநகர் அண்ணா நகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் 80 அடி ரோட்டில் உள்ள Filpcart நிறுவனத்தின் கிளை நிறுவனமான F 1 Solutions நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார் என்பவர் 14.05.2020 ம் தேதி அண்ணா நகர் காவல் நிலையம் வந்து தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடந்த 17/03/2020 ம் தேதி ஆடிட்டிங் செய்த போது ஸ்டோர் ரூமில் வைத்திருந்த ரீபிளேஸ்மெண்டிற்கு வந்திருந்த புதிய ஆப்பிள் போன்களை பரிசோதித்து பார்க்கும் போது அதிலிருந்த 35 ஆப்பிள் ஐ போன்கள் இருந்த பாக்ஸில் செல் போன்களுக்கு பதிலாக பழைய செல் போன்களுக்கான பேட்டரிகள் இருக்கவும், அங்கிருந்த CC TV பதிவுகளை பார்வையிட்டு கொண்டிருந்த போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த மனோஜ் என்பவர் சாப்பிட செல்வதாக சொல்லி விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்து, மேற்படி நபர் 21,11,480/− ரூபாய் மதிப்புள்ள 35 ஆப்பிள் ஐ போன்களை திருடிச் சென்று விட்டதாக கொடுத்த எழுத்துப்பூர்வமான புகாருக்கு நிலையத்தில் மனு ரசீது வழங்கி விசாரித்து வந்த நிலையில் 27/06/2020 ம் தேதி வழக்காக பதிவு செய்யப்பட்டு கனம் காவல் துணை ஆணையர் குற்றம், மதுரை மாநகர் திரு. பழனிக்குமார் அவர்களின் உத்தரவின்படி கனம் காவல் உதவி ஆணையர் அண்ணா நகர், குற்ற சரகம் திரு.வினோஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி அண்ணா நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. B.சுரேஷ் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. செந்தில் குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பன்னீர் செல்வம், கணினிப்பிரிவு தலைமைக் காவலர் 1154, கனேசபாண்டி, மற்றும் முதல் நிலை காவலர் 1565 வெங்கட்ராமன், முதல் நிலை காவலர் 1001, முத்துகுமார் ராஜா ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கணீனிப்பிரிவு தலைமை காவலர் கனேசபாண்டி மூலம் மதுரை மாநகர் சைபர் கிரைமிற்கு வேண்டுதல் கடிதங்கள் அனுப்ப பட்ட நிலையில் சைபர் கிரைமிலிருந்து அனுப்பி இருந்த களவு போன ஆப்பிள் ஐ போன்களின் IMEI எண்களுக்கான அழைப்பு விபரங்களை பார்வையிட்ட கணினி பிரிவு தலைமை காவலர் செல் போன்களை வைத்திருப்போர்களின் விபரங்கள் குறித்து கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மேற்படி செல் போன்களில் 20,20,030/−ரூபாய் மதிப்புள்ள 34 செல் போன்களை தனி நபர்களிடமிருந்தும், கடைகளிலிருந்தும் கைபற்றி எதிரி குறித்து துப்பு வைத்திருந்த நிலையில் வெளியூர்களில் சுற்றித் திரிந்து நீண்ட காலம் தலைமறைவாக இருந்து வந்த எதிரி மதுரைக்கு வந்திருப்பது குறித்து கிடைத்த ரகசிய தகவலை பெற்று சென்ற தனிப் படையினர் மற்றும் காவல் ஆய்வாளர் எதிரியான பொள்ளாச்சி, நேதாஜி ரோடு, தங்கமுத்து காலனியை சேர்ந்த பால்ராஜ் மகன் மனோஜ் வயது 28/2020, என்பவரை 20/12/2020 அன்று காலை 11.30 மணிக்கு கைது செய்து எதிரியின் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று 21/12/2020 அன்று காலை 10.30 மணியளவில் கனம் JM VI மதுரை நீதி மன்ற நடுவர் திரு. எஸ். முத்துராமன் அவர்கள் முன்பாக ஆஜர் படுத்தி நடுவர் அவர்களின் உத்தரவின்படி சிவகங்கை கிளை சிறைச்சாலையில் நீதி மன்ற காவல் அடைப்பு செய்யப்பட்டார்.
தனிப்படையினரின் பணியை உயர்திரு. காவல் ஆணையர் பிரைம் ஆனந்த் சின்ஹா அவர்கள் வெகுவாக பாராட்டினார்.