Police Recruitment

சென்னை பெருநகரில் காணாமல் போன மற்றும் திருட்டு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்(22-12.2020).

சென்னை பெருநகரில் காணாமல் போன மற்றும் திருட்டு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்(22-12.2020).

சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் திரு.R.தினகரன், இ.கா.ப, (தெற்கு), திரு.A.அருண், இ.கா.ப (வடக்கு) அவர்கள் மேற்பார்வையில் 4 மண்டல இணை ஆணையாளர்கள் அவர்களின் அறிவுரையின் பேரில் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், உதவி ஆணையர்கள், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்ட 12 காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவல் குழுவினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

காவல் குழுவினர் காணாமல் போன மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டும், செல்போன்களின் சர்வதேச செல்போன் கருவி அடையாள (IMEI) குறியீட்டு எண்களை கொண்டும், செல்போன் நிறுவனங்களின் உதவி கொண்டு தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து தனிப்படையினர் திறம்பட செயல்பட்டு செல்போன்கள் மீட்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல், 4 காவல் மண்டலங்களிலும், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி கைப்பற்றப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக, 22.12.2020 அன்று மாலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 120 செல்போன்களை, 12 காவல் மாவட்டங்களிலிருந்தும் வந்த செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் கடந்த 18.09.2020 அன்று 1,193 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர்.ஏ.அமல்ராஜ், இ.கா.ப., (தலைமையிடம்), முனைவர் ஆர்.தினகரன், இ.கா.ப., (தெற்கு), திரு.ஏ.அருண், இ.கா.ப., (வடக்கு), இணை ஆணையாளர்கள் திரு.R.சுதாகர், இ.கா.ப, (கிழக்கு), திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., (வடக்கு), திருமதி.C.மகேஷ்வரி, இ.கா.ப (மேற்கு), திரு.A.G.பாபு, இ.கா.ப., (தெற்கு), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.