Police Recruitment

மக்களின் புகார்களை விரைந்து முடிக்கும் சென்னை பெருநகர காவல் துறையினர்.

J6 திருவான்மியூர் காவல் நிலையம் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் பறிப்பு குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டி அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ .க .பா அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு .தினகரன் இ. கா. பா அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை ஆணையாளர் திரு .பாபு இ.கா.பா அவர்களின் வழிகாட்டுதல் படி அடையாறு மாவட்ட துணை ஆணையாளர் திரு .விக்கிரமன் இ.கா.பா அவர்கள் அடையாறு மாவட்டத்தில் உதவி ஆணையாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து செல்போன் பரறிப்பு குற்றவாளிகளை கைது செய்யுமாறு அறிவுரை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 02.01.2021 ம்‌ தேதி கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெனிஃபர் வயது 24 என்பவர் தனது வேலையை முடித்துவிட்டு திருவான்மியூர் ஸ்ரீனிவாசபுரம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தபோது தனக்கு பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தனது (SAMSUNG) செல்போனை பறித்து சென்றுவிட்டதாக புகார் அளிக்க தரமணி உதவி ஆணையாளர் திரு .ரவி அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் புலன் விசாரணை செய்ததில் இருந்து பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் வயது (19 )என்பவரும் அவருடன் இளம் சிறார் ஒருவரும் சேர்ந்து திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த தரமணி உதவி ஆணையாளர் திரு .ரவி அவர்களின் தனிப்படையினர் ஆன தலைமை காவல் திரு .கோபால் திரு .கருணாகரன் முதல் நிலை காவலர் திரு .ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அவரிடமிருந்து கிண்டி பகுதியில் வழிப்பறி செய்யப்பட்ட 4 செல்போன்கள் உட்பட 12 செல்போன்களை கைப்பற்றினர் .கையகப்படுத்தப்பட்ட இளம் சிறார் குழந்தைகள் நல அலுவலர் மூலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது .கைது செய்யப்பட்ட வினோத் என்ற நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மற்ற செல்போன்களின் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த அவர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து செல்போன் பறிப்பிற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் 12 செல்போன்களையும் கைப்பற்றிய தனிப்படையினரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
போலீஸ் நியூஸ் செய்திகளுக்காக

Leave a Reply

Your email address will not be published.