SPEED RADAR GUN மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிப்பு.
இன்று மதுரை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் SPEED RADAR GUN மூலமாக மதுரை மாநகருக்குள் அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்தார்கள். ஒவ்வொரு சாலைகளுக்கும் வேகக்கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகருக்குள் 30km வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் 50km வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 80km வேகத்திலும் செல்லும்படி மத்திய அரசு வழிகாட்டுதலின்படி வேக கட்டுப்பாடு எச்சரிக்கை உத்தரவு சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளது. SPEED RADAR GUN ஆனது எதிரே வரக்கூடிய வாகனத்தினை Zoom செய்து வாகனத்தின் வேகத்தை ரேடார் தன்மையின் மூலம் வாகனத்தில் கதிர்கள் மோதி மீண்டும் கருவிக்கு reflect ஆகி வாகனத்தின் வேகத்தை துல்லியமாக கணித்து கொடுக்கும் தன்மை கொண்டது. இக்கருவியை வைத்து சாலையின் வேகக்கட்டுப்பாட்டு எல்லையை பதிவு செய்யும் போது எவ்வளவு வேகத்தில் வாகனங்கள் வந்துள்ளது என்பதனை துல்லியமாக பதிவு செய்துவிடும். இதன் மூலம் அதிகமான வேகத்தில் மதுரை மாநகருக்குள் செல்பவர்களை விரைவில் அடையாளம் காண இந்த கருவி காவல்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது..