Police Department News

ஆத்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் காதலியிடம் வம்பு: மானத்தைக் காக்க ரவுடியைக் கொன்ற காதலன் கைது

ஆத்தூரில் கோயிலுக்கு வந்த காதல் ஜோடியிடம்  ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காதலியின் மானம் காக்க, காதலன் ரவுடியைக் கத்தியால் குத்தினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் கோயில் உள்ளது. வனம் சூழ்ந்த மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகம் வந்து செல்வர். அக்கம் பக்கத்து ஊரிலிருந்து காதல் ஜோடிகளும் இங்கு வருவார்கள்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள ரவுடிகள் சிலர் அங்கு வரும் காதல் ஜோடிகள் மற்றும் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ம் சென்னிமலை மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் ஆத்தூர் ரவுடி கார்த்திகேயன் என்பவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் கிடைத்து அங்கு வந்த தலைவாசல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூட்டாளிகளால் ரவுடி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால்சம்பவ இடத்தில் கிடைத்த கத்தி, ரத்தக்கறை படிந்த துப்பட்டா, செருப்பு ஆகியவற்றால்  யாரோ பெண் வந்து போன தடம்போல் தெரிந்தது. ஆகவே விசாரணையைத் துரிதப்படுத்திய போலீஸார் கார்த்திகேயனின் கூட்டாளி மாரிமுத்துவைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாரிமுத்து சொன்ன கதையைக் கேட்டு போலீஸார் திடுக்கிட்டனர், நான் கார்த்திகேயனைகொல்லவில்லை. நானும் கார்த்திகேயனும் அன்று நன்றாக மது அருந்தினோம். முழு போதையில் கத்தியுடன் யாரிடமாவது வழிப்பறியில் ஈடுபடும் நோக்கத்துடன் வனப்பகுதிக்குள் யாராவது காதல் ஜோடிகள் தனியாக இருக்கிறார்களா? என்று பார்க்கப்போனோம்.

அப்போது ஒரு காதல் ஜோடி தனியாக இருந்தனர். யார் என்று கேட்டு மிரட்டினோம். கடலூரைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிப்பவர்கள் என்றார்கள். அவர்களிடமிருந்த பணம் நகையை கத்தியை காட்டி மிரட்டிப் பறித்தோம். அப்போது அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி பலாத்காரத்தில் ஈடுபட முயன்றோம்.

அவர்கள் இருவரும் கெஞ்சினர், ஆனாலும் நாங்கள் போதையில் இருந்ததால் அவர்கள் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை. அப்போது கெஞ்சிக்கொண்டிருந்த மாணவன் திடீரென ஆவேசமாகி எங்களிடமிருந்த கத்தியைப் பிடுங்கிஅந்தப்பெண்ணிடம் பலாத்காரத்தில் ஈடுபட்ட கார்த்திகேயனைக் குத்திவிட்டான்.

கார்த்திகேயனைக் கத்தியால் குத்தியதைப் பார்த்தவுடன் பயத்தால் நான் ஓடிவிட்டேன். அதன் பின்னர் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. விஷயத்தை வெளியே சொன்னால் எங்கே நானும் சிக்கிக்கொள்வேனோ என்று அமைதி காத்தேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்தது கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசனை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஆத்தூர் ரவுடி கார்த்திகேயன், கூட்டாளி மாரிமுத்து உள்ளிட்ட மேலும் பலர் அங்குவரும் இளம் ஜோடிகளை மிரட்டி வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 100 சவரனுக்குமேல் அவர்கள் வழிப்பறி செய்துள்ளதாக கூறியுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காததால் எந்தக் குற்றமும் போலீஸார் பார்வைக்கு இதுவரை வெளியே வரவில்லை.

வடசென்னிமலை கோயில் மலையும் வனமும் சூழ்ந்த இடம் என்பதால் வனத்துறை, அறநிலையத்துறை, போலீஸார்இணைந்து பக்தர்களுக்கு பாதுகாப்புஅளித்தனா் 

Leave a Reply

Your email address will not be published.