Police Department News

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பது உண்மையா?

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பது உண்மையா?

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்க அனுமதி இல்லை என்பது முற்றிலும் பொய்.

மத்திய அரசின்
“Police-Forces (Restriction of Rights) Act, 1966” என்ற சட்டத்தின் பிரிவு (3)ன் படி , இந்தியாவில் உள்ள அனைத்து காவல் பிரிவை சார்ந்த காவலர்களும், குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் கூட்டமைப்பை (Association) ஏற்படுத்தி கொள்ள வழிவகை செய்துள்ளது.

மேலும் முன்னாள் “பாரதப் பிரதமர் மாண்புமிகு
திரு.மொராஜி தேசாய்” அவர்களால் இந்தியா முழுவதும் உள்ள காவல் துறையை மேம்படுத்தும் பொருட்டு ஸ்ரீ தர்ம வீர் என்பவரின் தலைமையில் 1977ஆம் ஆண்டு ” National Police Commission ” என்ற ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையமானது 1979ஆம் ஆண்டு இந்தியவில் காவல் துறையை மேம்படுத்த பல பரிந்துரைகளை கூறியது அவற்றில் முதன்மையானது காவலர்களுக்கு சங்கம் அமைப்பது, காவலர்களுக்கு 8 மணி நேர பணி, காவலர்களுக்கு வார விடுமுறை,
மிகை நேர பணிக்கு அதற்கேற்ற ஊதியம்,
போன்றவற்றிற்கு பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் National Police Commission ன் பரிந்துரையின்படி, தமிழகத்திலும் முன்னாள் முதல்வர் மாண்புமிகு திரு.MGR அவர்கள் 1981 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் DSP வரை சங்கம் அமைத்துக் கொள்ள
G.O Ms. No.82 Dated 20th January 1981 படி ஒரு ஆணையையும் பிறப்பித்துள்ளார். ஆக காவல்துறையினருக்கு சங்கம் அமைத்து கொள்ள சட்டப்படி உரிமை உண்டு.

Leave a Reply

Your email address will not be published.