இனி “லைசென்ஸ்” எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை..! அரசு புதிய அறிவிப்பு….!!
வாகன ஓட்டிகள் இனி பயணம் மேற்கொள்ளும் பொழுது டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் என்பது கட்டாயம், நீங்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். இல்லையென்றால் காவல்துறையினர் உங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடும். ஒரு சில நேரத்தில் நீங்கள் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு செல்வது இயல்பான ஒன்று.. அத்தகைய சிக்கல்களை போக்க டெல்லி அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
தேசிய தலைநகரில் வசிப்பவர்கள் எப்போதும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்லத் தேவையில்லை என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒரு நபர் டிஜி-லாக்கர் அல்லது எம்-பரிவாஹன்(m-Parivahan ) மொபைல் செயலிகளில் சேமித்து அவற்றை போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் பிற அலுவலகங்களுக்கு சரிபார்ப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
டிஜி-லாக்கர் அல்லது எம்-பரிவாஹனில் கிடைக்கும் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழின் மின்னணு பதிவு மோட்டார் வாகன சட்டம், 1988-ன் கீழ் செல்லுபடியாகும் என்று டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 விதிகளின்படி இந்த ஆவணங்கள் அசல் ஆவணங்களுடன் இணையாக காணப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போக்குவரத்து காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவு டிஜிலாக்கர் மற்றும் எம்-பரிவாஹன் செயலியில் காட்டப்படும் மின்னணு வடிவ ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் அனைத்தையும் முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.”
இருப்பினும், யாராவது தங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவு சான்றிதழின் மென்மையான நகல்கள் அல்லது டிஜிட்டல் நகல்களை வைத்திருந்தால், அவை அசல் பதிவுகள் அல்லது மின்னணு பதிவுகளாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வேறு எந்த வடிவத்திலும் வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறியுள்ளது