
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது.
சென்னை கொடுங்கையூர், எருக்காஞ்சேரியை சேர்ந்தவர் கஸ்பர் மகன் அந்தோணிசாமி வயது 53. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான குருவிநத்தம் பகுதிக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து அந்தோணிசாமி 05.09.2021 அன்று அதே பகுதியில் உள்ள மூதாதையர் தோட்டத்தில் தனது மனைவியுடன் உழுது கொண்டிருக்கும் போது அதை விரும்பாத அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமியின் சகோதரர் மரிய மைக்கேல் வயது 42 என்பவர் அந்தோணிசாமியிடம் தகராறு செய்து தவறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்தோணிசாமி அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குருசந்திர வடிவேல் வழக்கு பதிவு செய்து மரிய மைக்கேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
