காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள் சென்னை¸ கீழ்பாக்கம் கார்டன் டி பி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவினால் சாலையில் ஆதரவற்று இருக்கும் சுமார் 100 நபர்களுக்கு தினமும் சென்று உணவு வழங்கி வருகின்றனர். டி பி சத்திரம் காவலர் குடியிருப்பு பல சிறப்புகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவலர்களின் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இக்குடியிருப்பு வளாகத்தில் சிங்கப் பெண்ணே என்ற பேட்மின்டன் விளையாட்டு அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் கலந்து […]
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இரண்டாவது முறையாக தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இச்சிறப்பு கருத்தரங்கினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர […]
மதுரை வைகையாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் எச்சரிக்கை வடகிழக்கு பருவ மழையினால் வைகை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் வைகையாற்றின் நீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வைகையாற்றில் இறங்கும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்புள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ கால் நடைகளைமேய்சலுக்காக ஆற்றிலோ அல்லது ஏறியிலோ ஓடைகளிலோ இறக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ்சேகர் […]