கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் […]
மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆறு ரவுடிகள், ஆயுதங்களுடன் கைது, மதிச்சியம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் E2, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான மதுரை வைகை வடகரை, ஆழ்வார்புரத்தில் வசித்து வருபவர் கலியப்பெருமாள் மகன் கருப்பு என்ற கருப்பசாமி வயது 30/21, இவர் மதுரை ஆழ்வார்புரம் மூங்கில்கடை தெரு, கந்தசாமி சேர்வை கல்யாண மஹால் அருகே அன்னை டூ வீலர் ஒர்க்ஸாப் வைத்து நடத்தி வருகிறார், இவர் கடந்த 23 ம் தேதி இரவு 10.15 மணியளவில் தனது […]
மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார் மதுரை, தல்லாகுளம் D1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தல்லாகுளம் வடக்கு தெருவில் குடியிருந்து வருபவர் விஸ்வநாதன் மகன் மணிகண்டன் வயது 49/2021, இவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே பஸ் ஸ்டான்டில் மகேஷ் டீ ஸ்டால் என்ற பெயரில் டீ கடை நடத்தி வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி இரவு வழக்கம் போல் […]