தமிழ்நாடு காவலர் நல நிதியை மருத்துவ செலவு மேற்கொண்ட காவலர் குடும்பங்களுக்கு காவல் ஆணையர் வழங்கினார்
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான மருத்துவச் செலவு தொகையான ரூ.8,09,131/- (எட்டு லட்சத்து ஒன்பதாயிரத்து நூற்று முப்பத்து ஒன்று)-யினை – தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து வரைவோலையாக பெற்று காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.