
பேட்டரி திருடியவர் கைது
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா வயது (31) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை எல்லீஸ் நகரை சேர்ந்த இப்ராஹிம் வயது (42) என்பவர் திருடினார். மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்ராஹீமை கைது செய்தனர்.
