பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் ‘சிந்தனை நாள்” விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, அதன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தை 1909ம் ஆண்டு திரு.பேடன் பவுல் என்பவர் தொடங்கினார். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் சாரண, சாரணியர்களின் நற்பண்புகளை வளர்த்தல், சமூக சேவையாற்றுவது போன்றதாகும். இவர் 22.02.1857 அன்று பிறந்தார். ஆகவே பாரத சாரண, சாரணியர் இயக்கத்தினர் அவரது பிறந்த நாளை ‘சிந்தனை நாள்” என்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த சிந்தனை நாள் விழாவில் இன்று (01.03.2020) காலை 07.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சாரண, சாரணியர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றியாற்றினார். பின் சாரண, சாரணியர்கள் தூத்துக்குடி, மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்டு குரூஸ்பர்னாந்து சிலை வரை சென்ற 2020ம் ஆண்டுக்கான ‘சிந்தனை நாள் பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்.