Police Department News

விபத்தில் பலியான உதவி-ஆய்வாளர்களின் உடல்களுக்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் பாலூர் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில் லாரி மோதிய விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த உதவி-ஆய்வாளர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது உடல்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உதவி-ஆய்வாளர் வெங்கடேசனின் உடல் காஞ்சீபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பெண் உதவி-ஆய்வாளர் புவனேஸ்வரியின் உடல் காஞ்சீபுரம் ஓரிக்கையில் […]

Police Department News

ஏ.டி.எம்.கொள்ளையில் பரபரப்பு அடைக்கலம் கொடுத்தவரை பிடிக்க தனிப்படையினர் அஸ்ஸாம் செல்ல முடிவு

கோயம்புத்தூர்: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமீத்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தலைமறைவாகிவிட்ட கொள்ளை கும்பல் தலைவனான அரியானா மாநிலத்தை சேர்ந்த அஸ்லாம், அவருடைய காதலி கிரண் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கைதான 8 பேரை காவல்துறையினர் கடந்த 15-ந் தேதி […]

Police Recruitment

ஆர்.கே.நகரில் அமைதியான வாக்குப்பதிவு: போலீஸார், ராணுவத்தினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு உதவி ஆய்வாளர், 5 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். தேர்தல் அமைதியாக நடப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய […]

Police Department News

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (45) கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மார்கழி மாத பூஜையையொட்டி ஒலிப்பெருக்கியில் பாடல் போடுவதற்காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் கருவறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த வெண்கல காளியம்மன் சிலை திருட்டு போயிருந்தது கண்டு பரபரப்பாயினர். சிறிய காளியம்மன் சிலை திருட்டு போகவில்லை. இதற்கிடையே சிலை திருட்டு நடந்த சம்பவத்தை அறிந்ததும் பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் ஆய்வாளர்கள் நித்யா (ஆண்டிமடம்), வேலுசாமி (ஜெயங்கொண்டம்) ஆகியோர் காளியம்மன் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் உண்டியல் சற்று தூரத்தில் கிடந்தது தெரியவந்தது. ஆனால் அதில் பணம் ஏதும் இல்லை. மேலும், துப்பு துலக்க காவல் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சற்று தூரம் வரை ஓடி நின்று விட்டது. மோப்ப நாயால் யாரையும் பிடிக்க இயலவில்லை. திருட்டு போன சாமி சிலை 3¼ அடி உயரம் கொண்டது. சிலையின் பொலிவுக்காக அதில் 1 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு ரூ.2½ லட்சம். கடந்த ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தான் இந்த வெண்கல சிலை கோவிலில் வைக்கப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து திட்டமிட்டே இந்த சிலை திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

A 25-year-old woman, who was allegedly set ablaze on Thursday evening in full public view in Secunderabad by a man suspected to be her former lover, succumbed to her burns this morning. She died around 7.30am while undergoing treatment at Gandhi Hospital in Secunderabad, Deputy Commissioner of Police (north zone) Ms.B Sumathi said. The man, […]

Police Department News

வெண்கல சிலை திருட்டு மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் தீவிர வலைவீச்சு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (45) கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மார்கழி மாத பூஜையையொட்டி ஒலிப்பெருக்கியில் பாடல் போடுவதற்காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் […]

Police Department News

மதுவிலக்கு வழக்குகளில் உள்ள வாகனங்கள் நாளை ஏலம் முன் தொகை செலுத்த காவல் கண்காணிப்பாளர் தகவல்

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சின்ன காஞ்சீபுரம் நத்தப்பேட்டை திருவீதிபள்ளத்தில் உள்ள காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் கேட்க விரும்புவோர் தங்களது ரேஷன்கார்டு நகலுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 […]

Police Department News

சபரிமலை அருகே பதுக்கபட்ட வெடிபொருட்கள் கேரள காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல்

கன்னியாகுமரி: சபரிமலை அருகே பாண்டித்தாவளம் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநிலம் பத்தினம் திட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பினோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம் காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று பாண்டித்தாவளம் பகுதியில் வெடி வழிபாடு நடத்தப்படும் இடத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பூமிக்கு அடியில் பல கேன்களில் மறைத்து வைத்திருந்த 300 கிலோ வெடிப்பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து சன்னிதானம் சிறப்பு அதிகாரி சஞ்சை குமார் […]

Police Department News

திருட்டை தடுக்க மதுரை காவல்துறையினர் புதிய ‘செயலி’ அறிமுகம்

மதுரை: மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக புதிய செயலி(ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் புதிய செயலியை அறிமுகப்படுத்தினர். இதைதொடர்ந்து டி.ஐ.ஜி. பிரதீப்குமார் பேசியதாவது, மதுரை புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பூட்டிய வீடுகளில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதால் வீடுகளை கண்காணித்து […]

Police Department News

துபாயில் இருந்து சென்னை விமானத்தில் நூதனமாக தங்கம் கடத்த முயற்சி

சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக விமானத்தை, விமான நிறுவன துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறை தொட்டியில் 2 கருப்பு நிற பைகள் இருந்ததை ஊழியர்கள் கண்டனர். உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தனர். அந்த பைகளில் வெடிகுண்டு இருக்குமோ? […]

Police Department News

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

திருவள்ளூர்: ஆந்திர மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 முறை ஆந்திர மதுபாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் முத்துவை குண்டர் […]