மோட்டார் வாகன போக்குவரத்து துறையுடன் இணைத்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை, 73 விதி மீறிய ஆட்டோகள் மீது வழக்கு பதிவு
மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோகளின் விதிமீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர், இந்த வகையில் நேற்று (19/11/24) மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி, காமராஜர் சாலை, மற்றும் கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துறையுடன் இணைந்து மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தகுதி சான்று மற்றும் உரிமம் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடக்கு RTO சார்பில் 12 ஆட்டோக்கள், தெற்கு RTO சார்பில் 6 ஆட்டோக்கள், மத்திய RTO சார்பில் 5 ஆட்டோக்கள் ஆக மொத்தம் 23 விதி மீறிய ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிற விதி மீறலுக்காக 50 ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல்துறை சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த திடீர் சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.செல்வம், திரு. மனோகரன், திரு.முரளி மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் திரு.கார்த்திக், திரு. கனேஷ்ராம், திரு.சுரேஷ் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.