வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரியம்மாபட்டி வருவாய் ஆய்வாளராக இருப்பவர் பாண்டியன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது தந்தை வேலுச்சாமிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ரூ.8000 லஞ்சமாக கேட்டுள்ளார். அதனால் இதுகுறித்து மாரிமுத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மாரிமுத்து ரசாயனம் தடவிய […]
Police Recruitment
திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசா ரணை நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தம் செய்வதாக இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்தும் இந்திய பார் கவுன்சிலிடமோ, சட்டத்துறை சார்ந்தவர்களிடமோ எந்த ஆலோசனையும் பெறாமல் எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள நுகர்வோர் […]
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு- கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு- கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்மரக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக வனப்பகுதி சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்துதல், கழிவறைகள் அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளுக்காக 2 தினங்களாக அப்பகுதி மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று முதல் வனப்பகுதி சுற்றுலா தளங்கள் திறக்கப்படுகிறது. தற்பொழுது வனப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல புதிய […]
கொலை வழக்கில் தீர்ப்பு : குடைப்பாறைப்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கில் தீர்ப்பு : குடைப்பாறைப்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திண்டுக்கல் குடைப்பா றைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன்களான தட்சிணா மூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2019-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட னர். இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து முருகேஸ்வரிக்கு பாது காப்பாக முத்தழகுபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு(29) என்பவர் இருந்து வந்தார். மிட்டாய் வியாபாரம் செய்து வந்த முருகேஸ்வரியின் கம்பெனியில் அருளானந்தபாபுவும் […]
திண்டுக்கல்லில் 650 கிலோ ரேசன் அரிசி பதுக்கியவர் கைது
திண்டுக்கல்லில் 650 கிலோ ரேசன் அரிசி பதுக்கியவர் கைது திண்டுக்கல் நகரில் ரேசன் அரிசியை பதுக்கி அதனை ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முத்தழகுபட்டியில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தானம் மகன் அமுல்ராஜ் (வயது37) […]
தருமபுரி மாவட்ட காவல்துறையில்
பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட
வாகனங்கள்
ரூபாய் 5,73,000-/-க்கு
ஏலம் விடப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல்துறையில்பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்டவாகனங்கள்ரூபாய் 5,73,000-/-க்குஏலம் விடப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் 9 இருசக்கர வாகனங்கள்,6 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 5 லட்சத்து 73 ஆயிரத்து 976 ரூபாய்க்கு ஏலம் […]
கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலி*
கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலி* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் நேற்று இரவு பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது,திருவிழாவை தொடர்ந்து இரவு சாமி ஊர்வலம் சென்றது.ஊர்வலத்தின் போது வைத்த பட்டாசு மினி சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுக்களின் மீது விழுந்ததில், மளமளவென பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கியது,பக்தர்கள் பதறி அடித்து ஓடத் துவங்கினர்.இந்த பட்டாசு விபத்தில் […]
அவுசிங்போர்டு குடியிருப்பில் நாய் தகராறில் கல்லூரி மானவியை தாக்கிய முன்னாள் இராணுவ வீரர் மற்றும் அவரது மகன் கைது.
அவுசிங்போர்டு குடியிருப்பில் நாய் தகராறில் கல்லூரி மானவியை தாக்கிய முன்னாள் இராணுவ வீரர் மற்றும் அவரது மகன் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கடமடை அவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன் மகள் அறிவுமதி (வயது. 21), தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் முருகன் (62) என்பவரது வளர்ப்பு நாய் குரைத்து கொன்டு துரத்தி […]
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் இன்று ‘நல்லிணக்க நாள்” உறுதிமொழி
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் இன்று ‘நல்லிணக்க நாள்” உறுதிமொழி தருமபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் இன்று ‘நல்லிணக்க நாள்” உறுதிமொழி.ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நல்லிணக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று (18.08.2023) தருமபுரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.நான் சாதி, இன, வட்டார, மத அல்லது […]
மழை காலங்களில் தமிழகத்தில் தண்ணீரை சேமிக்க திட்டம் எதுவுமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
மழை காலங்களில் தமிழகத்தில் தண்ணீரை சேமிக்க திட்டம் எதுவுமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது, மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், […]