
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு
01.08.25 அன்று மாலை 4. 30 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக.. பேருந்தில் செல்லக்கூடிய மாணவர்களுக்கு,, அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி செல்வதனை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது . இதில் போக்குவரத்து துணை ஆணையர் எஸ். வனிதா மாவட்ட இளஞ்சிறார் நீதிமன்ற நடுவர் திரு. பாண்டியராஜன் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள், செல்வின் இளமாறன் , காவல் ஆய்வாளர்கள், தங்கமணி, நந்தகுமார், பூர்ண கிருஷ்ணன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்.. மனோகரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
