மதுரை, செல்லூர் குலமங்களம் மெயின் ரோட்டில் கஞ்சா விற்றவரை அதிரடியாக கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் கடந்த 3 ம் தேதி காலை 11 மணியளவில் நிலையத்தில் பணியில் இருந்த போது, அவரது ரகசிய தகவலாளி நிலையத்தில் நேரில் ஆஜராகி, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்ணை பல்க் அருகே கஞ்சா விற்பதாக கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு கூறி அவரின் உத்தரவின்படி நிலைய தலைமை காவலர் திரு. செந்தில்பாண்டியன், முதல் நிலை காவலர் திரு. சிலம்பரசன் ஆகியோருடன் தக்க உபகரணங்கலோடு , சம்பவ இடத்திற்கு விரைந்து, ரகசிய தகவலாளி அடையாளம் காட்டி மறைந்தவுடன், போலீசார் கஞ்சா விற்றவரை மடக்கிப்பிடித்து விசாரித்த போது அவர் மதுரை, பனங்காடி, கருப்பையாபுரத்தை சேர்ந்த பாலு சேர்வை மகன் பாண்டித்துரை வயது 40 /21, என தெரியவந்தது அவரை சோதனை செய்த போது அவர் கையில் வைத்திருந்த பையில் 5 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தார், குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதன் பேரில் அவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி திருமதி. லெக்ஷிமி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.