மதுரை, செல்லூரில் இளம் பெண்ணின் உயிரை பறித்த செல் போன்
மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் போஸ் வீதி, ரெங்கராஜன் தெருவிலுள்ள தெய்வம் ஜமுனா இல்லத்தில் வசித்து வருபவர் முத்துகருப்பன் மகன் சென்பகம் வயது 47/21, இவர் மதுரை கீழமாசி வீதியில் நாட்டு மருந்துக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி வயது 40/21, இவர் தறி நெசவு தொழில் செய்து வருகிறார், இவர்களுக்கு முத்து கயல் விழி வயது 20/21, என்ற மகள் உள்ளார். இவர் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றும் இசக்கி ராஜா என்ற மகன் வயது 19/21, இவர் மதுரை நரிமேடு ஜோதி உயர் நிலை பள்ளியில் +2 படித்து வருகிறார். தற்போது கொரோனா காலமாதலால் இருவரும் செல் போனில் ஆன் லைனில் படித்து வந்த நிலையில் வாட்ஸ்அப் மற்றும் பல ஆப்புகளை பயன்படுத்தி வந்ததால் இவர்களது தந்தை அவர்களை கண்டித்து வந்துள்ளார், இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி காலை 9 மணிக்கு மகள் முத்துகயல்விழி செல்போனை நெடு நேரம், நோண்டிக் கொண்டிருந்த போது அவரது தந்தை இன்று ஞாயற்றுக் கிழமை ஆன் லைன் கிளாஸ்தான் இல்லையே பிறகு ஏன் போனை நோட்டிக் கொண்டே இருக்கிறாய் என கண்டித்துள்ளார். உடனே முத்துக்கயல்விழி போனை அணைத்து வைத்து விட்டு சென்றார் அதன்பின் அரை மணி நேரம் கழித்து வந்து தான் மூட்டைப் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக சொல்லவே உடனே ஒரு போக்கு ஆட்டோவை பிடித்து மதுரை நரிமேட்டில் உள்ள் சரவணன் மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல அங்கு அவர்கள் அரசு மருத்துவ மனைக்கு செல்லுமாறு அறிவுருத்தவே, மீண்டும் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சென்ற 8 ம் தேதியன்று சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார், உடனே இவரது தந்தை தன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் சொல்லி விட்டு கடந்த 9 ம் தேதி செல்லூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார் , அதில் தன் மகளின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படி விசாரணை செய்து அவர்களது குல வழக்கப்படி உடலை நல்லடக்கம் செய்ய உதவும்படி கூறியிருந்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.