Police Recruitment

*பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – 2019*

.மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்காக  நான்கு காவல் துணை ஆணையர்கள் (தலைமையிடம், சட்டம் & ஒழுங்கு,  குற்றம், போக்குவரத்து) மற்றும் இதர பிரிவுகளான மதுரை  மாநகர ஆயுதப்படை பிரிவு, குதிரைப்படை பிரிவு, துப்பறியும் நாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவு, தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த  5 கம்பெனிகள், ஊர்க்காவல்படை உட்பட 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மதுரை மாநகரில் உள்ள 09 சோதனைச்சாவடிகளில் 25 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கியமாக மதுரை மாநகர் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை சுற்றி 5  அதிநவீன சுழலும் கேமிராக்களும் மற்றும் 32 வயர்லெஸ் (Wi-Fi ) கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகரில் உள்ள முக்கிய இடங்களிலும் மற்றும் முக்கிய சந்திப்புகளிலும் 80 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

                    .அரவிந்தசாமி

                 போலீஸ் நியூஸ்

          சிவகங்கை மாவட்ட நிருபர்

ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின்                     

              இளைஞரணி தலைவர்

               சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.