Police Department News

சொந்த செலவில் அசத்தும் திருப்பூர் ஆய்வாளர்

சொந்த செலவில் அசத்தும் திருப்பூர் ஆய்வாளர்

முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்களாக உள்ள போலீசார் மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இரவு, பகல் பாராது சேவை புரிந்து வருகின்றனர். அதுவும் கொரோனா காலத்தில் மக்களுக்காக கடமை உணர்வுடன் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

இத்தகைய போலீசார் பட்டியலில் இடம்பிடித்துள்ள திருப்பூர் நகரம் சிறுவர் கடத்தல் தடுப்பு பிரிவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.ஜோதிமணி, ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் நகர எல்லை, பழைய பஸ்ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.

ஊரடங்கை கண்காணிக்க ரோந்து பணி சென்ற இன்ஸ்பெக்டர் ஜோதிமணி, இவர்களின் நிலை கண்டு கண் கலங்கினார். இதனை தொடர்ந்து உடனடியாக தனது சொந்த பணத்தில் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய ஜோதிமணி, தனது கையினாலே அதனை அவர்களுக்கு கொடுத்தார். இதுபோல் சுமார் 100 உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி அவர்களின் பசியாற்றினார் இந்த மனிதநேய பெண் காவலர். இந்த மனிதநேய புனிதவதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.