Police Department News

சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி மாணவியை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கைது

சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி 8-ம் வகுப்பு மாணவியை நிர்வாணப்படுத்திய ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் கனூஜ் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவியை, அவரது ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இது குறித்து மாணவியின் தந்தை, “எனது மகள் கனூஜ் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். என் மகளுக்கு சீருடைக்கு அளவு எடுக்க வேண்டும் என்று அவளது ஆசிரியர் அழைத்துள்ளார். ஆசிரியர் ஆண் என்பதால் எனது மகள் தயக்கம் காட்டியுள்ளார். ஆனால், அவரோ எனது மகளை வற்புறுத்தி ஒட்டுமொத்த ஆடைகளையும் அகற்றச் செய்திருக்கிறார். எனது மகள் அழதிருக்கிறாள். உடனே அந்த ஆசிரியர் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்திருக்கிறார். இருந்தாலும், எனது மகள் அவளது தாயிடம் நடந்ததைக் கூறினார். அதன் அடிப்படையிலேயே நான் காவல்நிலையத்தில் புகார் செய்தேன்” எனக் கூறினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில், பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் விசாரித்தபோது ஆசிரியர் குறிப்பிட்ட அந்த மாணவியிடம் அவ்வாறு நடந்தது உண்மைதான் என்றனர். மேலும், இதுபோன்ற பல வேளைகளில் பலவித பாலியல் சீண்டல்களை அந்த ஆசிரியர் தங்களுக்கு செய்ததாகவும் மாணவிகள் கூறினர். இதன் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.