தெருவில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் போர்வையும் வழங்கிய மனிதநேயம் கொண்ட பெண் காவல் ஆய்வாளர், குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாநகர் S.S.காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் ரயில் நிலையம், நேதாஜி ரோடு, காளவாசல் மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் குளிரிலும் கொசுக்கடியில் படுத்துறங்கிய ஆதரவற்ற நபர்களுக்கு தனது சொந்த செலவில் உணவும் போர்வையும் வழங்கினார்.
இவரது மனிதநேயமிக்க சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். கொரோனா தொற்றின் முதல் அலையின் போது , இவர் சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது கர்பிணிப் பெண்கள், மாற்றுத்திறலாளிகள் மற்றும் ஆதரவற்றோர்கள் ஆகியோர்களுக்கு இது போன்று பல நலத் திட்டங்களை தன் சொந்த செலவில் வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.