மதுரை, எல்லீஸ் நகர் பகுதியில், இளம் பெண்ணை வைத்து விபச்சாம் செய்து வந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று வாலிபர்கள் கைது. S.S.காலனி C3, போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை S.S.காலனி C3, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா அவர்களது தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையுடன் ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தனி பிரிவு போலீசார்கள் ஆய்வாளர். திருமதி ஹேமாமாலா, சார்பு ஆய்வாளர்கள் திருமதி.சாந்தி, திருமதி செல்வகுமாரி, மற்றும் தலைமை காவலர் திருமதி. விஜயலட்சுமி, முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடமான மதுரை எல்லீஸ் நகர் ஹவுஸிங் போர்ட்டு டோர் நம்பர் H.446, விரைந்தனர் அங்கு ஆள் கடத்தல் பிரிவு தலைமை காவலர் திரு. கேசவன் அவர்களை வாடிக்கையாளர் போல் மேற்படி விலாசத்தில் இருந்தவர்களிடம் அனுப்பி அங்கிருந்த இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களிடம் ரூபாய் ஆயிரம் கொடுத்து இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருக்க கேட்க அவர்களும் பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்குள் இருந்த 20 வயது பெண்ணிடம் அவரை அனுப்பி உள்ளனர். அவர் உள்ளே சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த இளம் பெண் தூத்துகுடி மாவட்டம் மாதவன் நாயர் காலனி, திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த இருளப்பன் மகள் ஜோதி வயது 20/21, என தெரிய வந்தது, மேலும் அந்த பெண்ணை நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து வீட்டிற்குள் அடைத்து வைத்து மேற்படி எல்லீஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மனைவி ரைமான் பீவி வயது 38/21, கூடல் புதூரை சேர்ந்த அய்யனார் மனைவி ராணி என்ற அழகம்மாள் வயது 33/21, எல்லீஸ் நகரை சேர்ந்த முருகன் மகன் ராமசாமி வயது 23/21, அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மகன் ரமேஷ்குமார் வயது 21/21, அதே பகுதியை சேர்ந்த நெல்சன் மகன் நிஷாந்த் வயது 28/21 ஆகியோர் மேற்படி வீட்டிற்குள் அடைத்து வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார்கள் இந்த தகவல் கிடைத்தவுடன் S.S.காலனி C3, காவல் ஆய்வாளர் திருமதி பிளவர்ஷீலா அவர்களின் தனிப் படையும் ஆள் கடத்தல் பிரிவு காவல் துறையினர் ஆய்வாளர் திருமதி ஹேமாமாலா அவர்களின் அதிரடி நடவடிக்கையாக மேற்படி நபர்களை கைது செய்து ஆய்வாளர் திருமதி பிளவர்ஷீலா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி பேரரசி அவர்கள் வழக்கு பதிவு செய்து, ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.