மதுரை பூதமங்கலம் பகுதியில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி சாவு, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், மேலூர் அருகே பூதமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் ரக்சனா வயது 14/21, இவர், வாச்சாம்பட்டியில் உள்ள அவரது உறவினரான முருகேசன் (பெரியப்பா) என்பவர் வீட்டிற்கு கடந்த ஒரு வாரமாக விருந்துக்கு வந்திருந்தவர் இன்று மதியம் 3 மணியை போல ரக்சனாவும் அவரது சின்னம்மா (முறை) முருகேஸ்வரியும் வாச்சம்பட்டி அருகே உள்ள கிரானைட் கல்குவாரியில் குளிக்கச் சென்றனர். முருகேஷ்வரி துணி துவைத்து கொண்டிருந்தார் ரக்சனா குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு நீச்சல் தெரியாமல் ரக்சனா என்பவர் நீரில் மூழ்கி விட்டார் உடனிருந்த முருகேஸ்வரிக்கும் நீச்சல் தெரியாததால் கூச்சல் போடவும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை கல்குவாரியில் தேடி மீட்டபோது குழந்தை இறந்துவிட்டது மேற்படி குழந்தையின் உடலை மேலூர்-அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பு குறித்து கீழவளவு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். சிறுமியின் இறப்பு கீழவளவு பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மேலூர் மகளிர் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்து.