Police Department News

ஊர் காவல் படையினரின் வாழ்வாதாரம் காப்பாற்பட வேண்டும்

ஊர் காவல் படையினரின் வாழ்வாதாரம் காப்பாற்பட வேண்டும்

ஊர்காவல் படையினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி ஒரு அலசல் நண்பர் விவேகானந்தன் அவர்களின், கருத்தைப்பற்றி இங்கே ஒரு சில வரிகள் கவனிக்கலாம். தமிழ்நாட்டில் 1963 ம் ஆண்டு ஊர்காவல் படை என்னும் அமைப்பை ஏற்படுத்தப்பட்டு இன்று வரை காவல்துறையில் அனைத்து விதமான பணிக்கும் அவர்களை ஈடுபடுத்தி பணி செய்து வருகின்றார்கள் தமிழ்நாட்டில் சுமார் 16000 பேர் பணியாற்றி வருகின்றார்கள் அவர்களுக்கு மாதம் முழுவதும் இருந்த பணியை குறைத்து மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கி மாதம் ஒன்றுக்கு 2800 ரூபாய் மட்டும் வழங்கி வருகின்றார்கள் இதை வைத்துக் கொண்டு அவர்களால் குடும்ப த்தை மேன்மைபடுத்த முடியாததால் வேறு வேலைக்கு சென்றாலும் அவர்களை உடனடியாக அவசர பணி என்று அழைக்கிறார்கள் அதுக்கும் மனம் தளராமல் பணிக்கு வந்து விடுகிறார்கள் அதனால் எந்தவொரு வேலைக்கும் நிரந்தரம் இல்லாமல் போய்விடுமோ என்று ஒவ்வொரு நாட்களும் மன வேதனையில் இருந்து வருகின்றார்கள் அவர்களின் பணியான போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல் பணி காவல் வாகனம் ஓட்டுதல் பணி திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துதல் பணி முக்கியமாக கொரோனா காலகட்டத்தில் உயிரை பொருட்படுத்தாமல் மாதம் முழுவதும் மக்களுக்கான பாதுகாப்பு பணி என பல்வேறு பாதுகாப்பு பணிகளை சிரமம் பார்க்காமல் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக பணி செய்து வருகின்றார்கள் எனவே வளர்ந்து வரும் கால சூழ்நிலையில் மக்களின் மாற்றத்திற்கு ஏற்ப கடந்த காலத்தில் ஊர்காவல் படை வீரர்கள் எந்தவொரு பணிக்கு சென்றாலும் மக்கள் மத்தியில் ஒரு அந்தஸ்து இருந்து வந்தது இனிவரும் காலங்களில் ஊர்காவல் படை வீரர்கள் தற்காலிக பணியாளர்கள் தான் என்று புரிந்து கொண்டார்கள் தற்போது எந்தவொரு பாதுகாப்பு பணிக்கு சென்றாலும் மக்கள் அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள் எனவே இனிவரும் காலங்களில் காவல்துறையில் காக்கி உடை அணிந்து கொண்டு தற்காலிகமாக பணிபுரிந்து வருவது ஏதுவாக இருக்காது எனவே கடந்த ஆட்சி காலத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அய்யா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது கடந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஊர்காவல் படை வீரர்களை இரண்டாம் நிலை காவலர்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை பதிவு செய்து உள்ளார்கள், என்பது குறிப்பிடத்தக்கது எனவே அய்யா அவர்கள் ஊர்காவல் படை வீரர்களின் நிலைமை கருத்தில் கொண்டு ஊர்காவல் படை வீரர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அதை தவிர்த்து பணி நாட்களை அதிகரித்தால் மீண்டும் பணிநாட்களை குறைக்க கூடும் இதற்கு ஒரே தீர்வாக பணிநிரந்தரம் செய்து வாழ்வளிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.