தூத்துக்குடி மாவட்டம் 06.11.2019 ரயில்வே ஐ.ஜி திருமதி. V. வனிதா, இ.கா.ப. அவர்கள் சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி திருமதி. N. Z. ஆசியம்மாள் இ.கா.ப. அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல்தகுதி தேர்வு இன்று(06.11.2019) தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தேர்வில் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு குழுமம் நடத்திய இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1850 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 752 பெண் விண்ணப்பதாரர்களுக்கு மற்றும் விளையாட்டு ஒதுக்கீட்டில் 39(Sports Quota) விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 2641 விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1211 ஆண் விண்ணப்பதாரர்களும், 446 பெண் விண்ணப்பதாரர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 639 ஆண் விண்ணப்பதாரர்களும், 306 பெண் விண்ணப்பதாரர்களும், விளையாட்டு ஒதுக்கீட்டின் படி 39 விண்ணப்பதாரர்களும் கலந்து கொள்கின்றனர்.
முதற்கட்டமாக உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல், மற்றும் ஓட்டம் போன்ற உடல் ஆற்றல் தேர்வு நடைபெறும், பின் இதில் தகுதி பெற்றவர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் மற்றும் ஓட்டம் போன்ற உடல் திறனாய்வு தேர்வு நடைபெறும்.
இதற்கான பணிகளை தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.