குடும்பச்சண்டையில் குழந்தையை தூக்கிச் சென்ற கணவன், காவல்துறையினரின் கவுன்சாலிங் அதன்பின் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது
திருச்சி அரியமங்கலம், காமராஜர் நகரில் வசித்து வருபவர் தனலெட்சுமி, பாலாஜி தம்பதியினர் இவர்களுக்கு ஒன்னரை வயதில் திஷ்வந்த என்ற மகன் உள்ளான், இவர்கள் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 ம் தேதி கணவனிடம் கோபித்துக்கொண்டு திருச்சியில் இருக்கும் தன் தாயார் வீட்டிற்கு தன் மகனுடன் வந்து விட்டார், இந்த நிலையில் கணவர் பாலாஜி அன்று மாலை தன் மாமியார் வீட்டிற்கு வந்து தன் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்தவர் யாருக்கும் தெரியாமல் தன் மகனை தூக்கிக்கொண்டு அரியமங்கலம் வந்து விட்டார், தகவல் அறிந்த மனைவி தனலட்சுமி இரவு 10.30 மணியளவில் அரியமங்கலத்திலுள்ள காவல்நிலையத்தில் தன் மகனை தன் கணவனிடத்திலிருந்து மீட்டுத்தரும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு.பரணிதரன் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துபழனி, மற்றும் மலர்விழி ஆகியோரை அனுப்பி பாலாஜியை குழந்தையுடன் அழைத்து வந்து தாயிடம் ஒப்படைத்தனர் அதன்பின், பொன்மலை மகளீர் காவல்நிலையத்தில் வைத்து ஆய்வாளர் அஜீம் முன்னிலையில் இருவருக்கும் கவுன்சிலிங் நடத்தி சமாதாப்படுத்தி குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.