75 வது இந்திய சுதந்திர தினவிழா இன்று (15.08.21) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் அண்ணா காவல் அரங்கத்தில் காலை 09.05 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், இச்சுதந்திர தினவிழாவில் காஞ்சிபுரம் சரகம் காவல் துணைத்தலைவர் திருமதி.சத்யபிரியா, இ.கா.ப. அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் முதல் இரண்டாம்நிலைக் காவலர் படி நிலைவரை உள்ள மொத்தம் 29 காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றதழ் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து அவர்களின் சேவையை பாராட்டினார்.