Police Recruitment

சென்னை தி நகரில் 13-11-2019 தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவில் தியாகராய நகரில் அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் மற்றும் நவீன சாலைகளை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் இயந்திரம் சாரா போக்குவரத்துக் கொள்கை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற வர்த்தக சின்னமாக விளங்கும் தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி, ரூ.39 கோடியே 86 லட்சம் செலவில் நடைபாதை வளாகமும், ரூ.19 கோடியே 11 லட்சத்தில் 23 ஸ்மார்ட் சாலைகளும் அமைக்கப்பட்டன. இத்திட்டங்களுக்கு மொத்தம் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், திறப்பு விழா தியாகராய சாலையில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று நடைபாதை வளாகத்தையும், ஸ்மார்ட் சாலைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இன்று சென்னை தி.நகர் பனகல் பார்க் பாண்டிபஜார் சந்திப்பில் நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஸ்மார்ட்சிட்டி திறந்து வைப்பதற்காக வருகை புரிந்ததால் தமிழ்நாடு காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு பாதுகாப்புக்காகவும் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்பிற்காகவும் அயராமல் பாடுபட்ட எமது காவல்துறையின் எதற்கு இந்த போலீஸ் இ நியூஸ்  சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் 

போலீஸ் இ நியூஸ் நமது செய்தியாளர் S.சு க ன் திருவல்லிக்கேணி

Leave a Reply

Your email address will not be published.