POLICE e NEWS: நாகப்பட்டினம் : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் தேதி முதல் (8.11.2019)ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு எழுத்து தேர்வில் பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டநிலையில் உடற்திறனாய்வு தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் நடக்க இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 15 மையங்களிலும் வரும் 18ம் தேதி முதல் மீண்டும் தேர்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காலை 6.00 am மணிக்கு நடைபெற உள்ளது எனவே வரும் (18.11.2019)ம் தேதி உடல் தகுதி தேர்வு மீண்டும் நடக்கிறது.
அன்றைய தினம் ஏற்கனவே கடந்த (9.11.2019)ம் தேதி பங்கேற்க வேண்டும் என அழைப்பாணை கொடுக்கப்பட்ட ஆண் தேர்வர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இதேபோன்று வரும் (19.11.2019)ம் தேதி நடைபெற உள்ள உடல் தகுதி தேர்வில் கடந்த (11.11.2019)ம் தேதி பங்கேற்க வேண்டும் அன அழைக்கப்பட்ட பெண் தேர்வர்கள் தவறாது ஆகராகுமாறு கேட்டுக்கொள்ள்ப்படுகிறீர்கள்.
போலீஸ் இ நியூஸ் நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் PG.வேதப்பிரியா