மேலூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின்படி மேலூர் அருகே சருகுவலையபட்டி அரசு மேல் நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சந்திரமெளலி தலைமை தாங்கினார். சருகுவலையாபட்டியை
சுற்றியுள்ள கிராமபுற பெண்களிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் காவலன் செயலியின் பயன்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு இலவச தொலை பேசி எண் 181, மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச தேலை பேசி எண் 1098, ஆகியவற்றை பயன்படுத்தி குற்றங்களை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கருத்தரங்கில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார், மேலூர் அனைத்து மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ரமாராணி, பெண்களுக்கான ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், அருள்குமார், குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் ஜேம்ஸ், சருகுவலையாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருந்தேவி ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.