மதுரையில், ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல்
தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் உத்ரவிட்டுள்ளார் அதன் பேரில் மதுரை மாநகரில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவில் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விடிய விடிய ரவுடிகளை கைது செய்யும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மதிச்சியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சாது ரமேஷ் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. நாகராஜன்அவர்களுடன் போலீசார் நடத்திய சோதனையில் ஆழ்வார்புரத்தை சேர்ந்த ஜெயமுருகன் வயது 19, வாசுதேவன் வயது 19, சுகுமார் வயது 19, முகமது அலி வயது 19, ஶ்ரீதர் வயது 19, சக்திபாண்டி வயது 20, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் தலைமையில் சிறப்பு தணிக்கை நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒரு தனிப்படையும் ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனிப்படையும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் 126 ரவுடிகளின் இருப்பிடங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அதில் 59 ரவுடிகளை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 9 ரவுடிகளிடமிருந்து ஆயுதங்கள் கைபற்றப்பட்டு அவர்கள மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்னர் அதே போல் 40 ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களிடமிருந்து நன்நடத்தை கடிதம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனர். மேலும் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்கும் வகையில் இது போன்று தணிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.