நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 26-09-2021 ம் தேதியன்று, தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேருந்துகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் சம்பந்தமாகவும், பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிப்பது சம்பந்தமாகவும் பேருந்து நிறுத்தங்கள் இல்லாத இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்ட குறைபாடுகளை காவல் ஆணையாளர் அவர்கள் சரிசெய்வதாக உறுதி அளித்தார்கள். காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க முயற்சி செய்வதாகவும், குற்ற செயல்கள் நடைபெறா வண்ணம் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள், குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் திரு.K.சுரேஷ்குமார் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு,நாகசங்கர் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்கள் திரு.ரமேஷ் கண்ணன் அவர்கள், திரு.பிறைச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.