மதுரை, செல்லூரில் திருடு போன இருசக்கர வாகனத்தை விரைந்து கண்டுபிடித்து, எதிரியை கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை மாநகர் செல்லூர், D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் சுயராஜியபுரம் 1 வது தெருவில் குடியிருப்பவர் வாவாகாசிம் மகன் அக்பர்அலி வயது 50/21, இவர் மதுரை புட்டுத்தோப்பில் சொந்தமாக லைனர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் இவர் தனது வேலை முடித்து வீட்டிற்கு வந்து தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு வைத்து பூட்டி விட்டு தூங்க சென்று விட்டார் மறு நாள் காலை எழுந்து வண்டியை பார்த்தபோது வண்டியை காணவில்லை உடனே 3 ம் தேதி காலை 8.30 மணியளவில் செல்லூர் D2, காவல் நிலையத்தில் தனது வண்டியை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி, வேதவள்ளி அவர்கள் விரைந்து செயல்பட்டார், இதற்கிடையே செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், அந்த வழியாக வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்தார், எனவே சந்தேகத்தின் பேரில் மேலும் விசாரணை செய்ததில் அவர் சிங்ம்புணரி, மீனாட்சி நகரை சேர்ந்த சரவணன் மகன் சேதுபதி வயது 24/21 என தெரிய வந்தது, அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் செல்லூர் சுயராஜ்ஜியபுரம் 1 வது தெரு, அக்பர் அலியின் வாகனம் என தெரிய வந்தது. உடனை அவனை நிலையம் அழைத்து வந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருடப்பட்ட வண்டியை பறிமுதல் செய்து மேற்படி வண்டி திருடிய குற்றவாளி சேதுபதியை நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.