மதுரை மாநகரில் போக்குவரத்து விதி முறை மீறலுக்கான அபராத தொகையை செலுத்த எளிய முறையினை உருவாக்கி தந்த மதுரை காவல் ஆணையர்
மதுரை மாநகரில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி E.Challan மிஷின் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இவரையில் போக்குவரத்து காவல் துறை சார்பாக மதுரை மாநகரில் போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் செலுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது அபராததொகையினை வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரி மற்றும் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் மட்டுமே செலுத்தும் வசதி இருந்து வந்தது. இதில் வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையினை செலுத்துவதில் பல சிரமங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, இதிலிருந்த சிரமங்களை நீக்கும் பொருட்டுஅபராதத் தொகையினை எளிதாக செலுத்தும் வகையில் காவல் ஆணையர் மதுரை மாநகர் அவர்களது ஏற்பாட்டில் 14.09.2021 முதல் UPI வசதியான Paytm, Google pay, Phone pe, Internet Bnking மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது, மற்றும் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படும் மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளின் அபராதம் தமிழகத்தின் எந்த ஒரு காவல் அதிகாரியிடமும் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டதின் மூலம் அபராதத் தொகை செலுத்த கூடுதல் வசதிகள் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளன.
இப்புதிய வசதிகள் மதுரை மாநகர காவல் துறையில் அமல்படுத்துவதற்கு முன்பு வரை 01.09.2021 முதல் 13.09.2021 வரையிலான அபராத தொகை ரூபாய் 3,19,700/−மட்டுமே, அரசிற்கு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வசதிகள் அமல்படுத்தப்பட்ட பின்பு 15.09.2021 முதல் 30.09.2021 வரை அபராதத் தொகையாக ரூபாய் 6,00,600/− அரசிற்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இரு மடங்கு அபராதத் தொகை அரசிற்கு செலுத்தப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் புதிய வசதிகளை உபயோகப்படுத்தி தங்களது அபராதத் தொகையினை செலுத்தி தொடர் சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாகனத்தின் நம்பர் பிளேட் குறைபாடு விதி மீறல்களில் ஈடுபட்ட 6698 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த 171 ஓட்டுனர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி வாகனங்களின் நம்பர் பிளேட் குறைபாடுகள் நீக்கப்பட்ட பின்பு வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மீண்டும் தொடர்ந்து இரண்டாம் முறையாக நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.