திருட்டு போன பொருட்களை 5 மணி நேரத்தில் மீட்ட திருநகர் போலீசார்
மதுரை மாநகர் திருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹார்விபட்டி பகுதியில் முத்துராஜ் என்பவரின் மர வேலை செய்யும் பட்டறையில் வைத்திருந்த ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான ட்ரில்லிங் மிஷின் கட்டிங் மெஷின் ஜம்பிங் மிஷின் ஆகியவற்றை திருடிச் சென்றனர், உடனே திருநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி, அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு கனேசன் மற்றும் காவலர்களுடன் விசாரணை செய்து ஹார்விபட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ்குமார் முத்துகிருஷ்ணன் கோபிகிருஷ்ணன் மது குமரன் ஆகியோரை 5 மணி நேரத்தில் கைது செய்து திருட்டு போன பொருட்களை மீட்டுள்ளனர்.