போலீசார் இடம் மாறுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை
போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினால் அதை ஒரு வாரத்திற்குள் அமல் படுத்த வேண்டும்.கவனக் குறைவாக இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழ்நாடு டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
நெல்லையில் தொடர் கொலைகளால் வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலூர் போலீஸ்காரர் அலெக்ஸ் ஜாய்ஸ், பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார். கடந்த மாதம் பிறந்து இறந்த குழந்தைக்காக சடங்கு செய்ய இவர் விடுப்பு கேட்டார் தேர்தல் பணியை காரணம் காட்டி விடுப்பு தரவில்லை, இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்டார் இது வேகமாக பரவியதை தொடர்ந்து அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் கடலூருக்கு இடமாற்றம் வழங்கியும் அதிகாரிகள் அமல் படுத்தவில்லை, இந்த நிலையில் அனைத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கும் டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள் அனுப்பிய சுற்றறிக்கை இடமாறுதல் வழங்கப்பட்டும் பணியாற்றும் இடத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல. தலைமை அலுவலகத்திலிருந்து வரும் உத்தரவுகள் தவிர ஐ.ஜி., டி.ஐ.ஜி., அலுவலக உத்தரவுகள் உடனடியாக அமல் படுத்தப்படுவதில்லை. எனவே இடமாறுதல் உத்தரவுகளை ஒரு வாரத்திற்குள் அமல் படுத்த வேண்டும், இதில் ஏதாவது நிர்வாக சிக்கல் இருந்தால் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கவனக் குறைவாக இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.