Police Department News

மதுரையில், தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் தலைமையில் உங்கள் துறையில் முதல்வர், திட்டம்

மதுரையில், தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் தலைமையில் உங்கள் துறையில் முதல்வர், திட்டம்

உங்கள் துறையில் முதல்வர், திட்டம் தொடர்பான காவல் துறையினர் குறை கேட்பு முகாம் தென்மண்டல காவல் துறை, தலைவர் திரு.T.S.அன்பு, IPS., அவர்களால் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 18.10.21 அன்று நடத்தப்பட்டது. இதில் தென் மண்டலத்திற்குட்பட்ட மாநகரம் மற்றும் மாவட்டங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் நேரடியாக ஒவ்வொரு காவல் அதிகாரிகள் மற்றும் ஒவ்வொரு காவல் ஆளிநர்களின் பணியிட மாறுதல் ஊதிய முரண்பாடு பதவி உயர்வு மற்றும் துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து 643 மனுக்களை பெற்று கொண்டார். அவ்வாறு பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது தகுந்த பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.